Skip to main content

Sithargal moola mantras

*குரு வணக்கம்.....*

சித்தர்களின் மரபியல் குரு, சிஷ்ய பாரம்பரியத்தின் மீது கட்டமைக்கப்பட்டது.

இங்கே குருவே எல்லாவற்றுக்கும் மேலானவராகவும், இறை நிலைக்கு இனையானவராகவும் வைத்துப் போற்றப் படுகின்றனர்.

குருவை வணங்குவதும் அவர் வழி நிற்றலுமே மேன்மையாக போற்றப் பட்டிருக்கிறது.

இத்தனை மகத்துவம் வாய்ந்த இந்த பாரம்பர்யத்தை அறிந்து தெளிய நினைக்கும் எவரும் குரு வழிபாட்டினைப் பற்றி அறிந்திருக்க வேண்டியது அவசியம்.

சித்தர்களின் எந்த ஒரு செயலும், முயற்சியும் தங்களின் குருவினை முன் வைத்தே துவங்கியிருக்கின்றனர்.

ஒவ்வொரு சீடரும் தன் குருவினை தியானிக்கவும், வணங்கிடவும் தனித்துவமான சூட்சும மூல மந்திரங்களை பயன் படுத்தினர்.

இதன் பின்னால் இருக்கும் மகத்துவம் நமக்கு பிடிபடாவிடினும் இதன் காரண காரியங்களை குருமுகமாக நிச்சயம் பெற இயலும்.

இந்த பதிவில் மகிமை வாய்ந்த சித்தர்களின் மூல மந்திரத்தினை பகிர்ந்து கொள்கிறேன்.

இவை மிகவும் முக்கியமானவை.

நந்தீசர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த சுவாமியே போற்றி!"

அகத்தியர் மூல மந்திரம்...

“ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!”

திருமூலர் மூல மந்த்திரம்...

"ஓம் ஸ்ரீம் கெம் ஸ்ரீ மூலநாத சித்த சுவாமியே போற்றி!"

போகர் மூல மந்திரம்...

"ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்த சுவாமியே போற்றி!"

கோரக்கர் மூல மந்திரம்...

“ஓம் ஸ்ரீம் க்லம் ஸ்ரீ கோரக்க சித்த சுவாமியே போற்றி!"

தேரையர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் லபம் நசீம் ஸ்ரீ தேரைய சித்த சுவாமியே போற்றி!"

சுந்தரானந்தர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சித்த சுவாமியே போற்றி!"

புலிப்பாணி மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் கிலீம் ஸ்ரீ புலிப்பாணி சித்த சுவாமியே போற்றி!"

பாம்பாட்டி சித்தர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி!"

காக புசண்டர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் லம் ஸ்வம் ஸ்ரீ காக புசண்ட சித்த சுவாமியே போற்றி!"

இடைக்காடர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் ருணம் ஸ்ரீ இடைக்காட்டு சித்த சுவாமியே போற்றி!"

சட்டைமுனி மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் சம் வம் சட்டைமுனி சுவாமியே போற்றி!"

அகப்பேய் சித்தர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் சௌம் ஸ்ரீ அகப்பேய் சித்த சுவாமியே போற்றி!"

கொங்கணவர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் நசீம் ஸ்ரீ கொங்கண சித்த சுவாமியே போற்றி!"

சிவவாக்கியர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ சிவவாக்கிய சித்த சுவாமியே போற்றி!"

உரோமரிஷி மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் கிலம் ஸ்ரீ உரோம ரிஷி சுவாமியே போற்றி!"

குதம்பை சித்தர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் சம் ஸ்ரீ குதம்பைச் சித்த சுவாமியே போற்றி!"

கருவூரார் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் வம் லம் ஸ்ரீ கருவூர் சித்த சுவாமியே போற்றி!"

சித்தர்களுக்கான மூல மந்திரங்கள் ஒவ்வொன்றும் தொடர்புடைய சித்த புருஷர்களை என்றும் தங்கள் தொடர்பில் வைத்திருக்க சீடர்கள் பயன்படுத்திய சூட்சுமமாகவே கருதப்படுகிறது.

இந்த மந்திரங்களை முறையாக பயன் படுத்துவதன் மூலம் தாங்கள் முன்னெடுக்கும் எந்த ஒரு செயலுக்கும் தங்கள் குருநாதரின் அருளும், ஆசியும் கிடைப்பதுடன்....சமயங்களில் அவர்களை நேரடியாக தரிசிக்கும் வாய்ப்புக் கூட கிட்டுமாம்.

ஆமாம்! , நம்ப முடியாத செய்தி இதுதான்....

என்றைக்கோ சமாதியடைந்த சித்த புருஷர்களை இந்த மூலமந்திரங்களின் துணை கொண்டு நேரில் தரிசிக்க முடியுமாம்...

சித்த புருஷர்களை நேரில் சந்திக்க வாய்ப்புள்ள அந்த முறையினை பார்ப்போம்..

*இந்த மந்திரங்களை எவ்வாறு பயன் படுத்துவது?*

ஆத்ம சுத்தியுடன், எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாது குருவருளை நாடுவோர் மட்டுமே இத்தகைய முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.

கபட எண்ணங்களை முன்வைத்து செய்யப்படும் முயற்சிகள் தோல்வியில் முடியும்.

சித்தர்கள் என்பவர்கள் ஆசாபாசங்களை கடந்தவர்கள்.

வழிபாடுகள் என்கிற பெயரிலான ஆராதனைகளை அவர்கள் விரும்புவதும் இல்லை, ஏற்றுக் கொள்வதுமில்லை. ஆனால் இன்றைக்கு பலர் ஆயிரத்தெட்டு போற்றிகளை கொண்ட பூசை முறைகளை சித்தர்களுக்கானது என கூறிவருகின்றனர்.

இனி வணங்கும் முறையினை பார்ப்போம்....

அமைதி நிறைந்த தூய்மையான, வெளிச்சம் மிகுந்த அறையொன்றில், கிழக்கு முகமாய் நாம் வணங்க விரும்பும் சித்தரின் படம் ஒன்றினை வைத்து, அதன் முன்னால் ஒரு திரியினைக் கொண்ட விளக்கு ஒன்றினை ஏற்றி வைத்திட வேண்டும்.

சுத்தமான குவளை ஒன்றில் நீர் நிரப்பி வைக்க வேண்டும்.ஒரு அங்குலம் விட்டமும் மூன்று மில்லிமீட்டர் தடிப்பான ஒரு செப்பு நாணயம் ஒன்றை சித்தர் படத்தின் முன்னர் வைத்திட வேண்டும்.

இப்போது சித்தரின் படத்திற்கு முன்னால் ஒரு துணி விரித்து அதில் பத்மாசனத்தில் அமர வேண்டும். பத்மாசனத்தில் அமர சிரமப் படுவோர் சாதாரணமாக அமர்ந்து கொள்ளலாம்.

மூச்சினை சீராக்கி, உடம்பை தளர்த்தி அமைதி நிலைக்கு வர வேண்டும். இந்த தருணத்தில் முந்தைய பதிவில் நாம் குறிப்பிட்ட மூல மந்திரத்தினை (நாம் வைத்த படத்திலுள்ள சித்தருக்குரிய) நூற்றியெட்டு முறை மனதில் மட்டுமே ஜெபிக்க வேண்டும்.

இந்த முறையில் தினமும் சூரிய உதயத்தின் போதும், அஸ்மனத்தின் போதும் தொடர்ந்து தினசரி இரண்டு முறை செய்திட வேண்டும்.

இந்த பூசை முறையில் சிலவற்றை ஒழுங்குடன் செய்தல் வேண்டும்.

ஒவ்வொரு முறையும் குரு வணக்கத்திற்கு முன்னர் குவளையில் புதிய நீர் நிரப்பிட வேண்டும்.

எக்காரணம் கொண்டும் மலர்களையோ, பழங்கள் அல்லது உணவு பொருட்களை படையல் போடுவது போன்றவற்றை செய்திடக் கூடாது.

சித்தர்கள் புறவழிபாட்டினை வெறுப்பவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இந்த முறையில் குரு வணக்கத்தினை எத்தனை ஆர்வத்துடனும், ஆத்ம சுத்தியுடனும் செய்து வருகிறோமோ அத்தனை விரைவில் நாம் வணங்கும் சித்தரின் அருளாசி கிடைக்கும். நமது முயற்சியின் தீவிரத்தினை பொறுத்து குறிப்பிட்ட அந்த மகா புருஷரின் திருவுருவ தரிசனமும் கிடைக்குமாம்.

மெய்யான குருவருள் நாடுவோருக்கு இந்த முறை கிடைத்தற்கரிய ஒரு வாய்ப்பு.

நன்றி - சித்தர்கள் இராச்சியம்..

*ஓம் நமச்சிவாய....*

Comments

Popular posts from this blog

Know about your health

www.supremeholisticinstitute.com சுகர்னு docter கிட்ட போராங்க .. அவரும் செக் பண்ணிட்டு 1 mg tablet கொடுக்கிறார். ஒரு வருஷம் கழிச்சு சுகர் ஏறிடுச்சுனு 2 mg tablet கொடுக்கிறார். மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு ரெண்டு combination tablet கொடுக்கிறார். மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு இன்சுலின் போட சொல்றார். அப்புறம் சுகர் கூட BP சேர்ந்திடுச்சுனு PRESSURE மாத்திரை போட சொல்றார். அப்புறம் கொலஸ்ட்ரால் சேர்ந்திடுச்சுனு அதுக்கு ஒரு மாத்திரை போட சொல்றார். அப்புறம் கால்ல புண்ணு வந்திடுச்சுனு காலை வெட்டி எடுக்க சொல்லுறான். காலை வெட்டி எடுத்ததும் ஒரு வருஷத்துல உயிர் போய்டுது. இதுல எந்த இடத்துலயும் அவன் DOCTER ரை திட்டுவதோ, குறை சொல்வதோ இல்லை. 1. தான் சாப்பிடற டேப்லெட் மேல சந்தேகம் வரல. 2. மாத்திரை சாப்பிட்டும் நோய் அதிகமாகிட்டே போகுதேனு அவன் யோசிக்கல. 3. ஒரு நோய் வந்து அப்புறம் மூணு நோய் ஆகிடுச்சேனு அவன் சிந்திக்கவில்லை. 4. வாரம் 300 ரூபாய்க்கு மாத்திரை சாப்பிட்டா போதும்னு நம்புறான். TABLET சாப்பிட்டா கிட்னி FAILURE ஆகும்னு அந்த அட்டையில் ஓரமா எழுதி இருக்கிறதை அவன் படிக்கிற...

108 kubera potri

www.supremeholisticinstitute.com #செல்வம்_தரும் #குபேரன்_108போற்றி 1.அளகாபுரி அரசே போற்றி 2. ஆனந்தம் தரும் அருளே போற்றி 3. இன்பவளம் அளிப்பாய் போற்றி 4. ஈடில்லாப் பெருந்தகையே போற்றி 5. உகந்து அளிக்கும் உண்மையே போற்றி 6. ஊக்கம் அளிப்பவனே போற்றி 7. எளியோனுக்கு அருள்பவனே போற்றி 8. ஏழ்மை நிலை அகற்றுவாய் போற்றி 9. ஐஸ்வர்யம் அளிப்பவனே போற்றி 10. ஒன்பது நிதி பெற்றவனே போற்றி 11. ஓங்கார பக்தனே போற்றி 12. கருத்தில் நிறைந்தவனே போற்றி 13. கனகராஜனே போற்றி 14. கனகரத்தினமே போற்றி 15. காசு மாலை அணிந்தவனே போற்றி 16. கிந்நரர்கள் தலைவனே போற்றி 17. கீர்த்தி அளிப்பவனே போற்றி 18. கீரிப்பிள்ளைப் பிரியனே போற்றி 19. குருவாரப் பிரியனே போற்றி 20. குணம் தரும் குபேரா போற்றி 21. குறை தீர்க்கும் குபேரா போற்றி 22. கும்பத்தில் உறைபவனே போற்றி 23. குண்டலம் அணிந்தவனே போற்றி 24. குபேர லோக நாயகனே போற்றி 25. குன்றாத நிதி அளிப்பாய் போற்றி 26. கேடதனை நீக்கிடுவாய் போற்றி 27. கேட்டவரம் அளிப்பவனே போற்றி 28. கோடி நிதி அளிப்பவனே போற்றி 29. சங்க நிதியைப் பெற்றவனே போற்றி 30. சங்கரர் தோழனே போற்றி ...

Age of Immortality Vedic Science

ABOUT THE HOLY "TRIVENI SANGAM" [PRAYAGA] OR THE TRIPLE STREAM - IN OUR OWN BODY :- "Just as those who are thirsty - quench their thirst on perceiving a tank, (for those) who desire attaining the path to the final bliss in the middle of the forehead, I explain the practice in the art of "Samadhi". As a disciple listen and assimilate the teaching; Make a resolve to ascend through the one RIGHT WAY; To experience the excellent plenitude of the self. Direct the silent Ganges (River Ganga) to the open space; Keep observe and seize the appropriate time to meditate at the junction of the eyebrows". [To achieve bliss, meditate on the middle of the eyebrows (bhrumadhyaka) or ajna-chakra - and direct the silent Ganges to the open space. Do it through one way (the way of the Kundalini-Yoga) and meditate on the self with a desire like that of a man who quenches his thirst after perceiving a tank. Enjoy the experience of the plenitude of the self.] MEAN...