*குரு வணக்கம்.....* சித்தர்களின் மரபியல் குரு, சிஷ்ய பாரம்பரியத்தின் மீது கட்டமைக்கப்பட்டது. இங்கே குருவே எல்லாவற்றுக்கும் மேலானவராகவும், இறை நிலைக்கு இனையானவராகவும் வைத்துப் போற்றப் படுகின்றனர். குருவை வணங்குவதும் அவர் வழி நிற்றலுமே மேன்மையாக போற்றப் பட்டிருக்கிறது. இத்தனை மகத்துவம் வாய்ந்த இந்த பாரம்பர்யத்தை அறிந்து தெளிய நினைக்கும் எவரும் குரு வழிபாட்டினைப் பற்றி அறிந்திருக்க வேண்டியது அவசியம். சித்தர்களின் எந்த ஒரு செயலும், முயற்சியும் தங்களின் குருவினை முன் வைத்தே துவங்கியிருக்கின்றனர். ஒவ்வொரு சீடரும் தன் குருவினை தியானிக்கவும், வணங்கிடவும் தனித்துவமான சூட்சும மூல மந்திரங்களை பயன் படுத்தினர். இதன் பின்னால் இருக்கும் மகத்துவம் நமக்கு பிடிபடாவிடினும் இதன் காரண காரியங்களை குருமுகமாக நிச்சயம் பெற இயலும். இந்த பதிவில் மகிமை வாய்ந்த சித்தர்களின் மூல மந்திரத்தினை பகிர்ந்து கொள்கிறேன். இவை மிகவும் முக்கியமானவை. நந்தீசர் மூல மந்திரம்... "ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த சுவாமியே போற்றி!" அகத்தியர் மூல மந்திரம்... “ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த ச...