தீமைகளைப் “பஸ்பமாக்கிவிட்டு” உயிராத்மாவைப் “புடம் போட்டு” நாம் ஒளியாக மாற வேண்டும் வைத்தியர்கள் தங்கத்தைப் பஸ்பமாக்கிக் கொடுக்கின்றார்கள். இரும்பைப் பஸ்பமாக்கிக் கொடுக்கின்றார்கள். செம்பைப் பஸ்பமாக்கிக் கொடுக்கின்றார்கள். பல சரக்கை அதனுடன் சேர்த்து அதனின் வீரிய உணர்வை மாற்றிவிட்டுப் பவுடராக்கி விடுகின்றார்கள். அதனின் சத்து கெட்டுப் போகாமல் இருப்பதற்காக அதிலிருக்கின்ற கடினமான நிலைகளைப் பஸ்பமாக்குகின்றார்கள். 1.அதனுடைய சத்தை எடுத்துச் சாப்பிடச் சொல்லும் போது அது தண்ணீராகக் கரைந்து 2.நம் உடலில் இருக்கக்கூடிய கெட்டதை இது பஸ்பம் செய்து 3.நல்ல இரத்தமாக மாற்றுகின்றது. 4.நம் உடலில் இருக்கக்கூடிய வியாதிகளைப் போக்குகின்றது. 5.வைத்திய முறையில் இவ்வாறு செய்கின்றோம். ஞானிகளும் மகரிஷிகளும் நம்மைப் போல வாழ்க்கையில் வாழ்ந்தவர்கள் தான். தன் வாழ்க்கையில் வந்த துன்பங்களில் இருந்து விடுபடுவதற்காக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் அந்த உயர்ந்த எண்ணங்களை எண்ணிக் கெட்டதையெல்லாம் பஸ்பம் செய்து விடுகின்றார்கள். தனக்குள் வந்த நோயை மாற்றி மெய் ஞானத்தின் தன்மை தனக்குள் வளர்த்து இந்த உடலில் இருக்கக்கூடி...