Skip to main content
www.supremeholisticinstitute.com

திருமந்திரம் ::  தியானம்
--------------------------------------------
கண்ணாக்கு மூக்குச் செவிஞானக் கூட்டத்துட்
பண்ணாக்கி நின்ற பழம்பொருள் ஒன்றுண்டு
அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டிப்
பிண்ணாக்கி நம்மைப் பிழைப்பித்த வாறே.

கண் நாக்கு மூக்கு செவி ஆகிய ஞானக் கருவிகள் சேர்க்கையால் நம்மைப் பண்படுத்தும் பழமையான பொருள் ஒன்றுண்டு;
உள் நாக்கினை ஒட்டி உள்ள சிறிய துளை வழியில் சென்று மேலே இருக்கும் இடத்தில் ஒளி வடிவில் இருக்கிறது. இதை தரிசித்தல் குண்டலினி சக்தி எழும்பி நம்மை மேம்படுத்தும் ...
-------------------------------------------------------------------------------
ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளிதன்னைக்
கண்ணாரப் பார்த்துக் கலந்தங் கிருந்திடில்
விண்ணாறு வந்து வெளிகண் டிடவோடிப்
பண்ணாமல் நின்றது பார்க்கலு மாமே.

பரவெளியை மூன்றாம் கண் கொண்டு உற்று பார்த்து இருக்க பிராண ஆறு உள்ளிருந்து வழிந்து ஓடுவது கண்டு நிற்கலாம்!!
---------------------------------------------------------------------------
ஒருபொழு துன்னார் உடலோ டுயிரை
ஒருபொழு துன்னார் உயிருட் சிவனை
ஒருபொழு துன்னார் சிவனுறை சிந்தையை
ஒருபொழு துன்னார் சந்திரப் பூவே.

ஒரு பொழுதும் என்னார் உடலோடு இருக்கும் உயிரை,
ஒரு பொழுதும் என்னார் உயிருள் இருக்கும் சிவனை,
ஒரு பொழுதும் என்னார் சிந்தனையில் சிவனை
ஒரு பொழுதும் என்னார் துரியாதீதத்தில் இருக்கும் நாதமண்டலத்தை!!!
ஆகா சிவனார் நம்முள்ளே இருக்கிறார் .... காணுவதும் காணாததும் நம் முயற்சியே.....
--------------------------------------------------------------------------
மனத்து விளக்கினை மாண்பட ஏற்றிச்
சினத்து விளக்கினைச் செல்ல எருக்கி
அனைத்து விளக்குந் திரியொக்கத் தூண்ட
மனத்து விளக்கது மாயா விளக்கே.

பொழிப்புரை :
மனதை செம்மை ஆக்கி அதில் தெய்வ நிலைக்கு ஒப்ப கூறப்படும் நல எண்ணம் மட்டுமே விளங்க / நிலை பெற செய்தால்... சினம் போன்ற அக்னி போன்ற எண்ண அலை அடங்கும். இங்ஙனம் மனம் தெய்வ நிலைய அடைய அணைத்து சக்கரங்களும் ஒளி பெரும்..
அதாவது தியானம் செய்யும் பொது மனம் செம்மை ஆகி காம வெகுளி மயக்கங்கள் அழியும். இதனால் மனதையும் மாயையையும் தாண்டிய நிலையில் நிலை பெறலாம்.
--------------------------------------------------------------------------
எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்
கண்ணார் அமுதனைக் கண்டறி வாரில்லை
உண்ணாடி உள்ளே ஒளிபெற நோக்கிடில்
கண்ணாடி போலக் கலந்துநின் றானே.

தியானம் செய் ...
-----------------------------------------------------------------------------
நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
வாட்டமும் இல்லை மனைக்கும் அழிவில்லை
ஓட்டமும் இல்லை உணர்வில்லை தானில்லை
தேட்டமும் இல்லை சிவன்அவன் ஆமே

தியானம் செய்தால் நாமும் சிவம் ஆவோம்...
------------------------------------------------------------------------------
நயனம் இரண்டையும் நாசிமேல் வைத்திட்
டுயர்வெழா வாயுவை உள்ளே அடக்கித்
துயரற நாடியே தூங்கவல் லார்க்குப்
பயனிது காயம் பயமில்லை தானே

ஆஞ்ஞைத் தியானம்.. வாசி பயிற்சி... இவை இரண்டே உடலின் பயன்..
------------------------------------------------------------------------------
மணிகடல் யாஅனை வார்குழல் மேகம்
அணிவண்டு தும்பி வளைபே ரிகையாழ்
தணிந்தெழு நாதங்கள் தாம்இவை பத்தும்
பணிந்தவர்க் கல்லது பார்க்கஒண் ணாதே.

மணி நா ஓசை, கடல் ஓசை, யானை பிளிறும் ஒலி, குழல் இசை, மேகத்தின் முழங்கு குரல், வண்டு, தும்பி இவற்றின் ஒலி, சங்கநாதம், முரசின் முழக்கம், யாழ் இவை` என்னும் ஒலிகள் போன்ற மெல்லிய ஒலிகள் பத்தினையும் ஆஞ்ஞைத் தியானத்தை அடைந்தவர் கட்கல்லது, மற்றையோர்களுக்குக் கேட்டல் கூடாததாகும்..
----------------------------------------------------------------------------
ஈசன் இயல்பும் இமையவர் ஈட்டமும்
பாசம் இயங்கும் பரிந்துயி ராய்நிற்கும்
ஓசை அதன்மணம் போல விடுவதோர்
ஓசையாம் ஈசன் உணரவல் லார்க்கே.

பதி என்பது நமக்குள் பதிவாகியிருக்கும் செம்மைநிலை; அதாவது சிவநிலை.
பசு என்பது உயிரும் உடலும் ஒன்றியிருக்கும் ஓர் உயிரி.
பாசம் என்பது உயிரியிடம் பதிவாகியுள்ள ஆசைக்கயிறு.
தியானத்தில் இருப்பவரும் இந்த பாசத்தால் மயக்கம் பெறுகின்றனர். மெல்லிய ஒலிகள் பத்தினையும் ஆஞ்ஞைத் தியானத்தை அடைந்தவர் அறிவர். அதுவும் சிவநிலை இல்லை என்று அறிக. அதை அடைந்து அதையும் தாண்ட வேண்டும். பாசத்தை முழுமையாக நீக்கினால் ஈசன் இயல்பும் தேவர்கள் அடைந்த பலனும் அறியலாம்.
---------------------------------------------------------------------------
நாத முடிவிலே நல்லாள் இருப்பது
நாத முடிவில்நல் யோகம் இருப்பது
நாத முடிவிலே நாட்டம் இருப்பது
நாத முடிவிலே நஞ்சுண்ட கண்டனே.

தியானத்தில் மனம் அடங்க அடங்க பல்வேறு ஒலிகள் கேட்டு பின் அடங்கும். அந்த முடிவில் சக்தி தாயும்.. யோகமும் ... சிவனும் இருப்பது கண்டேன் (நாமும் காணலாம்).
------------------------------------------------------------------------------
உதிக்கின்ற ஆறினும் உள்ளங்கி ஐந்தும்
துதிக்கின்ற தேசுடைத் தூங்கிருள் நீங்கி
அதிக்கின்ற ஐவருள் நாதம் ஒடுங்கக்
கதிக்கொன்றை ஈசன் கழல்சேர லாமே.

ஆறு ஆதாரங்களாவன; மூலம், கொப்பூழ், மேல்வயிறு, நெஞ்சம், மிடறு, புருவநடு என்பனவாம்.
துதிக்கப்படவேண்டிய பொன் ஒளியானது மாய இருள் நீக்க பிரமன் விஷ்ணு உருத்திரன் மகேசுவரன் சதாசிவன் ஐவரையும் தியானிக்கும் தியானத்தில் ஒடுங்க.. பொன் ஒளியான ஈசன் அடி சேரலாம்.
தியானம் பல தட்டுக்கள் உள்ளது.. பல நிறங்கள் தாண்டிய பின்னே பொன் ஒளி விளங்கும்!
ஈசன் அடி காண்பதே உடல் எடுத்து வந்த வேலை... மாய சாயங்கள் நீக்கினால் அருள் கிடப்பது நிச்சயம்...
--------------------------------------------------------------------------------
பள்ளி அறையில் பகலே இருளில்லை
கொள்ளி அறையிற் கொளுந்தாமற் காக்கலாம்
ஒள்ளி தறியில்ஓர் ஓசனை நீள்இது
வெள்ளி அறையில் விடிவில்லை தானே.

ஆக்ஞை/சகஸ்ரம்/துரியாதீத நிலை அடைந்த ஆன்மா பகல் இரவு என்று மாயமயக்கதில் மனதிற்கு தெரிவதை தாண்டி ஏரியில் ஒளியில் நிலைக்கும். ஊழ் வினியாயல் ஏற்படும் மும்மலத்தின் இருள் இல்லாது போக யாண்டும் பகலே யாம். இதனால் அகால மரணம் அடைந்து உடலை கொள்ளி இட்டு கொளுத்தி எரித்து சாம்பாலாக்காமல் நெடுங்காலம் இருக்குமாறு காக்கலாம்.
---------------------------------------------------------------------------
கொண்ட விரதம் குறையாமல் தான்ஒன்றித்
தண்டுடன் ஓடித் தலைப்பட்ட யோகிக்கு
மண்டலம் மூன்றினும் ஒக்க வளர்ந்தபின்
பிண்டமும் ஊழி பிரியா திருக்குமே.

ஓம் நமசிவாய .............
---------------------------------------------------------------------------
அவ்வவர் மண்டலம் ஆம்பரிசு ஒன்றுண்டு
அவ்வவர் மண்டலத்து அவ்வவர் தேவராம்
அவ்வவர் மண்டலம் அவ்வவர்க் கேவரில்
அவ்வவர் மண்டலம் ஆயம்மற் றோர்க்கே.

அவ்வவர் மண்டலத்தினால் ஆகின்ற தன்மை ஒன்றுள்ளது. அக்கினி, சூரிய, சந்திர மண்டலங்களுக்குப் பிரமன், விஷ்ணு, உருத்திரன் ஆகியோர் தலைவராம். அவ்வவரது ஆட்சி அந்த அந்த மண்டலத்தில் இருப்பின் அவ்வவரது மண்டலம் மற்றவர்க்கு உதவி செய்யும் கூட்டமாகும்.
--------------------------------------------------------------------------
இளைக்கின்ற நெஞ்சத் திருட்டறை உள்ளே
முளைக்கின்ற மண்டலம் மூன்றினும் ஒன்றித்
துளைப்பெரும் பாசம் துருவிடு மாகில்
இளைப்பின்றி மார்கழி ஏற்றம தாமே

பாச மயக்கத்தால் உள்ளம் இருட்டறையாக இருக்கிறது. அங்கு உதிக்கும் அக்கினி, சூரிய, சந்திர மண்டலங்கள் வழியாக பாசம் நீக்கி சிரசின் மேல் விடியற்காலம் போல வெளிச்சத்தைக் காணலாம் பின் சிவா கதி அடையலாம்
------------------------------------------------------------------------------
முக்குண மூடற வாயுவை மூலத்தே
சிக்கென மூடித் திரித்துப் பிடித்திட்டுத்
தக்க வலமிடம் நாழிகை சாதிக்க
வைக்கும் உயிர்நிலை வானவர் கோனே

பிராணாயாமம் முதலியவற்றை முறைப்படி பயில வல்லவர்க்கு அவற்றின் பயனைத் தருபவன், தேவ தேவனாகிய சிவபெருமானே...
-------------------------------------------------------------------------
நடலித்த நாபிக்கு நால்விரல் மேலே
மடலித்த வாணிக் கிருவிரல் உள்ளே
கடலித் திருந்து கருதவல் லார்கள்
சடலத் தலைவனைத் தாமறிந் தாரே

அநாகதச் சக்கரத்தில் தியானிக்க வல்லவர்கள் உடம்புக்கு உரியவனாகிய ஆன்மாவை அறிந்தவராவார்.
சிவயோகியரேயாயினும், அனாகதத்தளவிலே நிற்பவர் ஆன்ம நிலையையே உணர்வர்; சிவ நிலையை உணர மாட்டார்.
-------------------------------------------------------------------------
அறிவாய் அசத்தென்னும் ஆறா றகன்று
செறிவான மாயை சிதைத்தரு ளாலே
பிறியாத பேரரு ளாயிடும் பெற்றி
நெறியான அன்பர் நிலையறிந் தாரே.

முப்பத்தாறு தத்துவங்களையும் (பொய்யானவை) அசத்தென்று அறிந்து தூய அறிவுகொண்டு வலிய மாயையின் மயக்கத்தையும் இறைவனது திருவருளால் கடந்து அவன் பேரருளை பற்றி நிற்பாரே அன்பர் (சான்றோர்).

Comments

Popular posts from this blog

Age of Immortality Vedic Science

ABOUT THE HOLY "TRIVENI SANGAM" [PRAYAGA] OR THE TRIPLE STREAM - IN OUR OWN BODY :- "Just as those who are thirsty - quench their thirst on perceiving a tank, (for those) who desire attaining the path to the final bliss in the middle of the forehead, I explain the practice in the art of "Samadhi". As a disciple listen and assimilate the teaching; Make a resolve to ascend through the one RIGHT WAY; To experience the excellent plenitude of the self. Direct the silent Ganges (River Ganga) to the open space; Keep observe and seize the appropriate time to meditate at the junction of the eyebrows". [To achieve bliss, meditate on the middle of the eyebrows (bhrumadhyaka) or ajna-chakra - and direct the silent Ganges to the open space. Do it through one way (the way of the Kundalini-Yoga) and meditate on the self with a desire like that of a man who quenches his thirst after perceiving a tank. Enjoy the experience of the plenitude of the self.] MEAN...

Immortality Possible by learning Vedic Science

ABOUT THE SUBTLE ENERGY CHANNELS - "THE NADIS" :- In Yoga, the "nadi" system is not the physical body nervous system. It is the most important component of the subtle body. It is the channel of activated energy; it is an etheric channel. The energy that is carried by this channel is called the "prana" energy. We may refer to a nadi - as wireless energy in motion. The term "prana" can also stand for "nadi" - since both mean energy in motion. A nadi, in short, is a very subtle astral tube. According to Yoga, the cosmic energy, which lies in the micro and macrocosms, runs through the nadies. The nadis are the positive and negative currents of the cosmic energy. Since prana energy flows through the nadis - they are called "prana-vahini". According to the "Hatha-Yoga-Pradipika" - there are about 72,000 nadis, which spread and move the cosmic energy in the body. The chief nadis are ten in number. They are :...

Know about your health

www.supremeholisticinstitute.com சுகர்னு docter கிட்ட போராங்க .. அவரும் செக் பண்ணிட்டு 1 mg tablet கொடுக்கிறார். ஒரு வருஷம் கழிச்சு சுகர் ஏறிடுச்சுனு 2 mg tablet கொடுக்கிறார். மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு ரெண்டு combination tablet கொடுக்கிறார். மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு இன்சுலின் போட சொல்றார். அப்புறம் சுகர் கூட BP சேர்ந்திடுச்சுனு PRESSURE மாத்திரை போட சொல்றார். அப்புறம் கொலஸ்ட்ரால் சேர்ந்திடுச்சுனு அதுக்கு ஒரு மாத்திரை போட சொல்றார். அப்புறம் கால்ல புண்ணு வந்திடுச்சுனு காலை வெட்டி எடுக்க சொல்லுறான். காலை வெட்டி எடுத்ததும் ஒரு வருஷத்துல உயிர் போய்டுது. இதுல எந்த இடத்துலயும் அவன் DOCTER ரை திட்டுவதோ, குறை சொல்வதோ இல்லை. 1. தான் சாப்பிடற டேப்லெட் மேல சந்தேகம் வரல. 2. மாத்திரை சாப்பிட்டும் நோய் அதிகமாகிட்டே போகுதேனு அவன் யோசிக்கல. 3. ஒரு நோய் வந்து அப்புறம் மூணு நோய் ஆகிடுச்சேனு அவன் சிந்திக்கவில்லை. 4. வாரம் 300 ரூபாய்க்கு மாத்திரை சாப்பிட்டா போதும்னு நம்புறான். TABLET சாப்பிட்டா கிட்னி FAILURE ஆகும்னு அந்த அட்டையில் ஓரமா எழுதி இருக்கிறதை அவன் படிக்கிற...