Skip to main content

kayakalpa practise secrets

#ஓம்_என்னும்_உயிர்ச்சக்தி:

தேவைகள் இரண்டு வகை. ஒன்று புறத்தேவை. மற்றொன்று அகத்தேவை. புறத்தேவைகள் சில மணித்துளிகள் மட்டுமே இன்பம் தரும். அகத்தேவைகள் ஆண்டுக் கணக்கில் இன்பத்தைத் தந்து கொண்டிருக்கும்.

எந்த வகையான தேவையாக இருந்தாலும் அவரின் தேவையை அவரவரே அடைந்து கொள்ள வேண்டும்.

மனித உடல் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. அது படைப்பைக் குறிக்கும். வளரும் உடலைப் பேணுதல் வேண்டும். அது காத்தலைக் குறிக்கும். எல்லா உடலுக்கும் இறுதியென ஒன்றிருக்கும். அது அழித்தலைக் குறிக்கும்.

படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழிலையும் செய்பவன் முக்கண்ணன் என்று கூறக் கேட்டிருக்கிறோம்.

முக்கண்ணன் என்பவர் வேறு எங்கும் வெளியில் இல்லை. அவர் அவரவர் உடம்புக்குள்ளேயே இருக்கின்றார். உள்ளேயிருக்கும் முக்கண்ணனை இயக்குகின்ற விசை நம்மிடமிருக்கிறது. கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்து கொண்டிருப்பவர்ளைப் போல, முக்கண்ணனைத் தேடி அலைந்து கொண்டிருப்பவர்கள் அனேகம்.
நம்மிடமிருக்கும் விசையைப் பயன்படுத்தினால் நமக்கு வேண்டிய தேவைகள் எல்லாம் நமக்குக் கிடைக்கும்.

தேவைகளை வேண்டுமென்று விரும்புகின்ற மனம், தேவைகளை அடைவதற்காகத் தினந்தோறும் சிறிது நேரமாவது முயற்சி செய்ய வேண்டும்.

எந்த முயற்சியும் இல்லாமல் அடைகின்ற 'தேவைகளெல்லாம் நீர்க்குமிழிகள் போல் தோன்றி அடுத்த கணத்தில் மறைந்துவிடும். முயற்சி செய்து அடைகின்ற தேவைகள் நீண்ட காலம் நன்மையடையச் செய்வதுடன் இன்பத்தை நுகரச் செய்யும்.

தேவைகளை அடைவதற்காக மேற்கொள்ளுகின்ற முயற்சிகளை சாதனை என்பர். சாதனை செய்யாமல் எந்தத் தேவையையும் சாதிக்க முடியாது. சாதனை செய்பவர்களே சாதனையாளர்கள். சாதனை செய்யாதவர்கள் வெறும் வேதனையாளர்கள்.

மலையின் உச்சியில் மணி வயிரம் இருக்கிறது என்று தெரிகிறது. மலையேறிச் செல்லாமல் மலையாடிவாரத்தில் நின்றுக்கொண்டு மணியே! என்று சொன்னால் மணி வருமா? என்று சிந்திக்க வேண்டும்.

நம்முன்னே மூன்று சக்திகள் இருக்கின்றன. அச்சக்திகளால் தேவைகள் அனைத்தையும் அடைந்துவிடலாம். அச்சக்தியை இயக்கும் ஒருவிசை 'ஓம்’ என்பதாகும். இந்க ஓம் என்னும் விசையை இயக்க இயக்க நமக்குள்ளே இருக்கும் மூன்று சக்திகளும் இயங்கத் தொடங்கும்.

ஓம் என்னும் மந்திர ஒலியை, காலையிலும் மாலையிலும்  சிலமணி நேரங்கள் (குறைந்தது ஒரு மணிநேரம்)சொல்லிக் கொண்டு சாதனை செய்து கொண்டு வந்தால், திறந்து கிடக்கும் ஐம்புலன்களின் ஆசாபாசங்களின் கதவுகள் மூடிக்கொள்ளும். அகக்கதவு திறக்கும்.

அப்போது வேதனைகள் எல்லாம் மறைந்துவிடும். சாதனை செய்யச் செய்ய தேவைகள் எல்லாவற்றை யும் அடைந்துவிடலாம்.தேவைகள் நிறைவேறும்போது, சித்திகள் கைகூடும், மனத்துக்குள் புது வகையான ஒழுக்கமும் ஞான அறிவும் உதயமாகும்.

இளமையுடன் இருக்க காயகற்பம் என்னும் மருந்து இருப்பதாகக் கூறுவார்கள். காயகற்பம் உண்டவர்கள் கற்பகாலம் வரை வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்று சொல்வார்கள்.அத்தகைய காயகற்பத்தைத் தேடி எங்கும் அலைய வேண்டாம். எந்தக் காயகற்பமும் நம் கையில் தான் நாம் செய்யும் சாதனையில்தான் இருக்கிறது.

நரை, திரை, மூப்பு, சாக்காடு என்னும் நான்கு வகையான துன்பங்களையும் அகற்றி என்றும் இளமையுடனிருக்க வகை செய்யும் காயகற்பமாகவும் விளங்குகிறது. இந்த...ஓம் என்னும் மந்திர ஒலி.

இக்காயகற்கப்பயிற்சியை காலை, மாலை, இரவு படுக்கைக்குச் செல்லும் போதும், உதயத்தில் எழும்போதும் தினந்தோறும் தவறாமல் ஒரு பத்து நிமிட நேரம் செய்ய வேண்டும்.

வலது நாசி வழியாகக் காற்றை உள்ளே இழுக்கும் போதும் ஓம்,

உள்ளே சென்ற காற்று உள்ளே நிறுத்தும் போதும் ஓம்

உள்ளே நின்று காற்று வெளியே வரும்போதும் ஓம் என்று மனதின் உள்ளேயே உச்சரித்துக் கொண்டுவந்தால் உடல் வெப்பமாகும். மூலத்திலே இருக்கும் முக்கண்ணன் விழித்தெழுவார்.

அப்படி விழிப்பதினால் எண்ணியது நடக்கும். சொல்வது கிடைக்கும் வல்லமை உண்டாகும். நல்லவை தோன்றும். ஞாலமே இனியதாகும். வாழ்வில் இன்பமுண்டாகும்.

www.supremeholisticinstitute.com

Comments

Popular posts from this blog

Immortality Possible by learning Vedic Science

ABOUT THE SUBTLE ENERGY CHANNELS - "THE NADIS" :- In Yoga, the "nadi" system is not the physical body nervous system. It is the most important component of the subtle body. It is the channel of activated energy; it is an etheric channel. The energy that is carried by this channel is called the "prana" energy. We may refer to a nadi - as wireless energy in motion. The term "prana" can also stand for "nadi" - since both mean energy in motion. A nadi, in short, is a very subtle astral tube. According to Yoga, the cosmic energy, which lies in the micro and macrocosms, runs through the nadies. The nadis are the positive and negative currents of the cosmic energy. Since prana energy flows through the nadis - they are called "prana-vahini". According to the "Hatha-Yoga-Pradipika" - there are about 72,000 nadis, which spread and move the cosmic energy in the body. The chief nadis are ten in number. They are :...

Know about your health

www.supremeholisticinstitute.com சுகர்னு docter கிட்ட போராங்க .. அவரும் செக் பண்ணிட்டு 1 mg tablet கொடுக்கிறார். ஒரு வருஷம் கழிச்சு சுகர் ஏறிடுச்சுனு 2 mg tablet கொடுக்கிறார். மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு ரெண்டு combination tablet கொடுக்கிறார். மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு இன்சுலின் போட சொல்றார். அப்புறம் சுகர் கூட BP சேர்ந்திடுச்சுனு PRESSURE மாத்திரை போட சொல்றார். அப்புறம் கொலஸ்ட்ரால் சேர்ந்திடுச்சுனு அதுக்கு ஒரு மாத்திரை போட சொல்றார். அப்புறம் கால்ல புண்ணு வந்திடுச்சுனு காலை வெட்டி எடுக்க சொல்லுறான். காலை வெட்டி எடுத்ததும் ஒரு வருஷத்துல உயிர் போய்டுது. இதுல எந்த இடத்துலயும் அவன் DOCTER ரை திட்டுவதோ, குறை சொல்வதோ இல்லை. 1. தான் சாப்பிடற டேப்லெட் மேல சந்தேகம் வரல. 2. மாத்திரை சாப்பிட்டும் நோய் அதிகமாகிட்டே போகுதேனு அவன் யோசிக்கல. 3. ஒரு நோய் வந்து அப்புறம் மூணு நோய் ஆகிடுச்சேனு அவன் சிந்திக்கவில்லை. 4. வாரம் 300 ரூபாய்க்கு மாத்திரை சாப்பிட்டா போதும்னு நம்புறான். TABLET சாப்பிட்டா கிட்னி FAILURE ஆகும்னு அந்த அட்டையில் ஓரமா எழுதி இருக்கிறதை அவன் படிக்கிற...

108 kubera potri

www.supremeholisticinstitute.com #செல்வம்_தரும் #குபேரன்_108போற்றி 1.அளகாபுரி அரசே போற்றி 2. ஆனந்தம் தரும் அருளே போற்றி 3. இன்பவளம் அளிப்பாய் போற்றி 4. ஈடில்லாப் பெருந்தகையே போற்றி 5. உகந்து அளிக்கும் உண்மையே போற்றி 6. ஊக்கம் அளிப்பவனே போற்றி 7. எளியோனுக்கு அருள்பவனே போற்றி 8. ஏழ்மை நிலை அகற்றுவாய் போற்றி 9. ஐஸ்வர்யம் அளிப்பவனே போற்றி 10. ஒன்பது நிதி பெற்றவனே போற்றி 11. ஓங்கார பக்தனே போற்றி 12. கருத்தில் நிறைந்தவனே போற்றி 13. கனகராஜனே போற்றி 14. கனகரத்தினமே போற்றி 15. காசு மாலை அணிந்தவனே போற்றி 16. கிந்நரர்கள் தலைவனே போற்றி 17. கீர்த்தி அளிப்பவனே போற்றி 18. கீரிப்பிள்ளைப் பிரியனே போற்றி 19. குருவாரப் பிரியனே போற்றி 20. குணம் தரும் குபேரா போற்றி 21. குறை தீர்க்கும் குபேரா போற்றி 22. கும்பத்தில் உறைபவனே போற்றி 23. குண்டலம் அணிந்தவனே போற்றி 24. குபேர லோக நாயகனே போற்றி 25. குன்றாத நிதி அளிப்பாய் போற்றி 26. கேடதனை நீக்கிடுவாய் போற்றி 27. கேட்டவரம் அளிப்பவனே போற்றி 28. கோடி நிதி அளிப்பவனே போற்றி 29. சங்க நிதியைப் பெற்றவனே போற்றி 30. சங்கரர் தோழனே போற்றி ...