Skip to main content

வாசியோகம்.

www.supremeholisticinstitute.com

#வாசி #என்றால் #என்ன....?

வா-என்றால் காற்று.
சி-என்றால் நெருப்பு.
சுவாசத்தையும் அதனூடே உள்ள    நெருப்பையும்  இணைத்து வாசிக்கும் யுக்தியின் பயிற்சியே வாசி எனப்படுவதாகும்.

"வாசி" என்ற வார்த்தையை திருப்பி படித்தால் "சிவா" என்று வரும்.

இந்த சுவாசக்காற்றைக் கொண்டு முறையாக சுவாசிக்கும் பொழுது தசவாயுக்களை சீரமைத்து உடம்பிலுள்ள மனம், உடல் சம்மந்தமான தீராத நோய்களை தீர்க்கவல்ல மாமருந்தாகும்.

#வாசி #இருப்பிடம்.

எல்லோரும் அறிவார் நவ வாசல்,   அறியாதார்  திருவாசல் என்ற பத்தாவது வாசலின் இருப்பிடமான உச்சிக்கு கீழே உண்ணாக்குக்கு மேலே உள்ள ஊசிமுனை அளவேயுள்ள இடுக்கமான  வழியாக  செல்லும் சுவாசத்தின் பெயரே வாசியாகும்.

இந்த சுவாசத்தின் யுக்தியைக் கொண்டு ஒன்பது வாசலின் உபாதைகளை அடைக்க வல்ல யோகமாகும்.

#வெளிசுவாசம் – #உள்சுவாசம்.

இரவு வந்தவுடன் படுக்கைக்கு செல்லும் போது மல்லாக்க படுத்துக்கொண்டு கை கால்களை சாதாரணமாக நீட்டிக்கொண்டு சுவாசத்தை கவனியுங்கள்.அப் போது வெளிசுவாசம் மாற்றப்பட்டுஉள்சுவாசம் வாசிப்பதை உற்று கவனியுங்கள்.

காலையிலிருந்து இரவு வரை உழைத்த களைப்பினால் சோர்ந்து, பார்க்கும் சக்தியை கண்களும், சிந்திக்கும் சக்தியை மனமும், உழைக்கும் சக்தியை உடலும் இழந்து உறங்கிவிடும்தருவாயில்,ஆனவம்,கன்மம்,மாயை,பசி,தாகம்,விருப்பு,வெருப்புகள் பற்றற்ற நிலையில் உள்சுவாசமான "வாசி" மட்டுமே இயங்கி காலையில் வெளி சுவாசத்திற்கு சக்தியை அளிக்கிறது.

#மாமருந்து

சுவாசத்தை கணக்கறிந்து மேலேற்றி மூலவரை வலம் வந்தபின் சுவாசம் ஒடுங்குகின்ற சுழுமுனையில் ஓங்காரப்பிரணவத்தை உள்ளடக்கி சுவாசத்தை இறக்கும் தருவாயில் முதுகு தண்டின் நடுனாடி வழியாக ஓடி பத்தாவதுவாசலின் உச்சியில் கனல் ஆவியில் உற்பத்தியாகும் அமிர்த நீராகிய மாமருந்தே சகலத்தையும் குணமாக்கும் சஞ்சீவினியாகும்.

மாங்காய்பால் உண்டு மலைமேல் இருப்போர்க்கு தேங்காய்பால் ஏதுக்கடி குதம்பாயா -(குதம்பை சித்தர்)
உயிராதார காற்று
பத்துக் காற்றுகளில் முதல் முக்கியமான ஆதாரக்காற்று உயிர்க்காற்றாகும்.

 தாயின் கருவில் ஜீவன் வளரும் போது பிராணன் என்ற உயிர்க்காற்று தன்னை முதலில் ஐக்கியப்படுத்திக் கொள்கிறது. உடல் வாழ்வதற்கு ஆதாரமானதால் உயிர்க்காற்றிற்கு பிராணன் என்று பெயர்.

 உடலுக்கு ஆதாரமான அந்தக் காற்றை எப்படியெல்லாம் பயன்படுத்தி உடலையும், ஆன்மாவையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் என்பது பற்றி பிராணனைக் கட்டுப்படுத்தும் பிராணயாமம் கூறுகின்றது.
இந்த பிராணயாமக் கலையே வாசிகலை என்றும், மூச்சுக்கலை என்றும் வாசுகிகலை என்று ரிஷிகள் சொல்கிறார்கள்.
 வாசியாகிய, பிராணனாகிய உயிர்காற்றை சரியாக பயன் படுத்ததாதல் தான் மனிதனுக்கு மரணம் நிகழ்கின்றது என்றும், சரியாக பயன் படுத்துபவனும், அதைப்பற்றி தெளிவாக அறிந்து கொண்டு செயல் படுத்துபவனும் என்றும் அழியாத தேகத்துடன் பாவ புண்ணியங்களுக்கு அப்பாற்பட்டு ஜீவமுக்தனாக வாழ்வான்.

 அப்படிப்பட்ட ஜீவமுக்தனின் புருவநடுவில் இறைவனாகிய "#தாண்டவராயன்_நடராசர்" எப்போதும் #ஆனந்த_திருநடனம் புரிவார் என்கிறார்கள் ரிஷிகள்.

#பிராணயாமம் என்ற உயிர்காற்றை பயிற்சிக்கு உட்படுத்தும் கலைக்கு சித்தர்கள் சரகலை என்று பெயர் சூட்டியுள்ளனர். உலகில் எந்த கலையை படித்தாலும் உடல்வாழ்வதற்கு அவசியமான உயிர்கலையும், ஜீவகலையுமான பிராணயாமத்தை சரிவர அறிந்து கொள்பவர்கள் மட்டுமே சிறந்த கலையை கற்றவர்களாக, அவர்கள் எப்போதும் இறைவனை காணும் நிலையில் இருக்கிறார்கள் இவர்கள் குருவிற்கும் குருவாக விளங்குபவர்கள் என்கிறார்கள். ரிஷிகள்.
 
Vedicwellness.org

Comments

  1. அன்பு வணக்கம் சுப்ரீம் ஓலிஸ்டிக் இன்ஸ்டிட்யூட்க்கு இம் மானுடம் பயனுறா ஜிவன் உள்ளவரை புத்தியை கொள்முதல் செய்து கொண்டே இருக்கனும் இது தான் இயற்கையின் நியதி இம் மானுடம் வாழும் வாழ்க்கையை நெறியோடு வாழ நிர்க்குமிழியான தன்னலம் தற்பெருமை தன் புகழ்ச்சி தனது புராணம் தான் என்பது இன்னும்...பல இவைகளைக் குறைத்து கொண்டால் அவரவர் வாழ்வு செம்மையான நல்ல பாதையில் பயணிக்கும் அன்பே சிவம் இயற்கை காலம் பொறுமை நமக்கு நல்ல அருமருந்து தமிழ் (இந்தியா )கடவுளுக்கு அரகர அரகர அரகர அரோகரா அரோகரா அரோகரா நன்றியுடன் அன்பு வணக்கம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Know about your health

www.supremeholisticinstitute.com சுகர்னு docter கிட்ட போராங்க .. அவரும் செக் பண்ணிட்டு 1 mg tablet கொடுக்கிறார். ஒரு வருஷம் கழிச்சு சுகர் ஏறிடுச்சுனு 2 mg tablet கொடுக்கிறார். மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு ரெண்டு combination tablet கொடுக்கிறார். மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு இன்சுலின் போட சொல்றார். அப்புறம் சுகர் கூட BP சேர்ந்திடுச்சுனு PRESSURE மாத்திரை போட சொல்றார். அப்புறம் கொலஸ்ட்ரால் சேர்ந்திடுச்சுனு அதுக்கு ஒரு மாத்திரை போட சொல்றார். அப்புறம் கால்ல புண்ணு வந்திடுச்சுனு காலை வெட்டி எடுக்க சொல்லுறான். காலை வெட்டி எடுத்ததும் ஒரு வருஷத்துல உயிர் போய்டுது. இதுல எந்த இடத்துலயும் அவன் DOCTER ரை திட்டுவதோ, குறை சொல்வதோ இல்லை. 1. தான் சாப்பிடற டேப்லெட் மேல சந்தேகம் வரல. 2. மாத்திரை சாப்பிட்டும் நோய் அதிகமாகிட்டே போகுதேனு அவன் யோசிக்கல. 3. ஒரு நோய் வந்து அப்புறம் மூணு நோய் ஆகிடுச்சேனு அவன் சிந்திக்கவில்லை. 4. வாரம் 300 ரூபாய்க்கு மாத்திரை சாப்பிட்டா போதும்னு நம்புறான். TABLET சாப்பிட்டா கிட்னி FAILURE ஆகும்னு அந்த அட்டையில் ஓரமா எழுதி இருக்கிறதை அவன் படிக்கிற...

108 kubera potri

www.supremeholisticinstitute.com #செல்வம்_தரும் #குபேரன்_108போற்றி 1.அளகாபுரி அரசே போற்றி 2. ஆனந்தம் தரும் அருளே போற்றி 3. இன்பவளம் அளிப்பாய் போற்றி 4. ஈடில்லாப் பெருந்தகையே போற்றி 5. உகந்து அளிக்கும் உண்மையே போற்றி 6. ஊக்கம் அளிப்பவனே போற்றி 7. எளியோனுக்கு அருள்பவனே போற்றி 8. ஏழ்மை நிலை அகற்றுவாய் போற்றி 9. ஐஸ்வர்யம் அளிப்பவனே போற்றி 10. ஒன்பது நிதி பெற்றவனே போற்றி 11. ஓங்கார பக்தனே போற்றி 12. கருத்தில் நிறைந்தவனே போற்றி 13. கனகராஜனே போற்றி 14. கனகரத்தினமே போற்றி 15. காசு மாலை அணிந்தவனே போற்றி 16. கிந்நரர்கள் தலைவனே போற்றி 17. கீர்த்தி அளிப்பவனே போற்றி 18. கீரிப்பிள்ளைப் பிரியனே போற்றி 19. குருவாரப் பிரியனே போற்றி 20. குணம் தரும் குபேரா போற்றி 21. குறை தீர்க்கும் குபேரா போற்றி 22. கும்பத்தில் உறைபவனே போற்றி 23. குண்டலம் அணிந்தவனே போற்றி 24. குபேர லோக நாயகனே போற்றி 25. குன்றாத நிதி அளிப்பாய் போற்றி 26. கேடதனை நீக்கிடுவாய் போற்றி 27. கேட்டவரம் அளிப்பவனே போற்றி 28. கோடி நிதி அளிப்பவனே போற்றி 29. சங்க நிதியைப் பெற்றவனே போற்றி 30. சங்கரர் தோழனே போற்றி ...

Age of Immortality Vedic Science

ABOUT THE HOLY "TRIVENI SANGAM" [PRAYAGA] OR THE TRIPLE STREAM - IN OUR OWN BODY :- "Just as those who are thirsty - quench their thirst on perceiving a tank, (for those) who desire attaining the path to the final bliss in the middle of the forehead, I explain the practice in the art of "Samadhi". As a disciple listen and assimilate the teaching; Make a resolve to ascend through the one RIGHT WAY; To experience the excellent plenitude of the self. Direct the silent Ganges (River Ganga) to the open space; Keep observe and seize the appropriate time to meditate at the junction of the eyebrows". [To achieve bliss, meditate on the middle of the eyebrows (bhrumadhyaka) or ajna-chakra - and direct the silent Ganges to the open space. Do it through one way (the way of the Kundalini-Yoga) and meditate on the self with a desire like that of a man who quenches his thirst after perceiving a tank. Enjoy the experience of the plenitude of the self.] MEAN...