Skip to main content
சிதறிய கவனத்தால்,
சிக்கிடும் வினையினுள்,

சிற்றின்ப வாயிலில்,
சிக்குண்ட மூலபொருள்,

சீர்கொண்டு எழவே
சரங்கொண்ட அனலினுள்,

சீற்றமானது சுழிமுனை வாயிலில்,
சத்-சித்தானது,  வித்தான மூலப்பொருள்,

சிக்கிய கால சுழற்சினுள்
சிக்காது  போக,
சிங்கார வேலனை சரவணபவத்துள்,

சிகரத்தில் உணர்ந்து,
சிவத்துள் ஒடுங்குவதே
சிதம்பர ரகசியம்.


Comments