வாசி யோகம் பற்றிய ஒரு முழுமையான பார்வை.
******************************************************************************************************************************************************************************************************************************************************
{சித்தர்களால் பெரிதும் போற்றப்பட்ட , வணங்கப்பட்ட , ரகசியமான முறையில் பேணப்பட்ட அற்புதமான கலையை நம் சித்த நண்பர்களுக்காக முழுமையாக பகிர்கிறேன் . காலத்தால் அழியாத இந்த அற்புத கலையை நீங்களும் முறையாக பயின்று சித்தத்தை சிவமாகுங்கள். நன்றி .}
மாணவர் தகுதி : இயமம் நியமம் என்ற மனித நேயமும் அன்பும் கடை பிடித்தல் அவசியம்.
வாசியோகம் ஏன் செய்ய வேண்டும் .?
மனித பிறவியில் ஒவ்வோருவரும் பெற வேண்டியது நான்கு சித்திகள் !.
1.காய சித்தி.
**************
அழியும் உடலை அழியாமல் பாதுகாத்தல்..
“அடங்கினால் ஒன்றும் இல்லை வருவதேது .
அச்சடத்தை வாழ்வித்தால் அவனே சித்தன் “ >>>
அகத்தியர் பூரண சூத்திரம் பாடல் ௪௫ மற்றும் ௪௬
2. வேதை சித்தி.
*****************
ஒரு பொருளின் அனுதன்மையை மாற்றுதல் . மதிப்பு குறைந்தவற்றை மதிப்பு மிக்கதாக மாற செய்தல் , பயன்படுத்தல், அறவழி பொருள் ஈட்டல் . ஆகியவை வேதை சாகா மருந்து என்ற முப்பூ செய்து முடித்தல் வேதை சித்தி .
3. யோக சித்தி.
****************
யோகா என்றால் இணைத்தல் என்று பொருள் . பொருள்களை இணைத்து புதிய பொருள் பெறுவது வேதை. அழியும உடலை அழியா உடலாக மாற்ற இறைவனோடு இன்னைத்தல் காய சித்தி
இறைவனோடு இணைந்து ஒன்றிப்போதல் ஞானம் .. இம்முன்றையும் பெறுவதற்கான தொழில் நுட்பம் சொல்வது யோகா .இதில் வெற்றி பெறுதல் யோகசித்தி ..
4. ஞான சித்தி.
****************
இதுவே முக்தி . காய சித்தி , வேதை சித்தி, யோகசித்தி அடைய வேண்டும் . தன்னுள் இறைவனை ஒளி வடிவில் கண்டு , இறைவனுடன் ஒன்றி, நிலைத்த பேரின்பம் பெற்று , இறைவனாக ஐந்தொழில் செய்தல் (படைத்தல் , காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்).
வாசியோகம் :
**************
யோகா என்பதில் பலவிதங்கள் உண்டு . இந்தியர் களின் யோகாவில் முக்கியமானவை
பக்தி யோகா -இறைவனிடம் பக்தி செய்து முக்தி அடைதல்.
ஹடயோஹா-உடலை பேணி பலவித பிராணாயாமம் செய்து , பந்த்ம் . முத்திரை , கிரியை ஆகிய முறைகளை பின்பற்றி இறைவனை அடைதல்.
கர்ம யோகம்-நமது கடமைகளை விறுப்பு வெறுப்பு இல்லாமல் இறைவனுக்கு அர்பணித்து செய்தல் .அதன் மூலம் இறைவனை அடைதல் .
வாசி யோகம் :
***************
இதற்கு அஷ்டாங்க யோகம் , குண்டலி யோகம் , ராஜ யோஹம் , ஆகிய பெயர் உண்டு இதை சிறிது மாற்றி கிரியயோகம் என்றும் சொல்லுவார்கள் .
வாசி யோகத்தில் 8 அங்கம் உண்டு. அவை . இயம, நியம , ஆசன , பிரணயாம , தாரண , தியான , சமாதி . .
வாசி என்பது காலக் கணக்கோடு , நெறிப்படுத்திய சுவாசம் ,. இந்த நெறிபடுத்திய சுவாசத்தை பயன் படுத்தி . குண்டலினி என்னும் சக்தியை உருவாக்கி அதை வாலையாக ஒளிர செய்வது . இந்த வாலை என்ற ஒளி தான் பூரணம் என்ற இறைவன் இந்த வாலை எல்லையற்ற சக்தி கொடுக்கும் . இந்த சக்திகள் சித்தி எனப்படும். சித்திகள் பல இருந்தாலும் 8 சித்திகள் அஷ்டமா சித்திகள் எனப்படும் . அமிர்தம் என்ற சாக சுரப்பை வாலைகொடுக்கும் . இதுவே உடலை அழியாமல் காக்கும் .
வாசி யோகத்தின் சிறப்பு .
****************************
அந்நெறி இந்நெறி என்னா தட்டங்கத்
தன்னெறி சென்று சமாதியில் நிலமின்
நன்னெறி செல்வார்க்கு ஞானத்தில் லேகலாம்
புன்னெறி யாகத்திற் போகில்லையாமே
-திருமூலர் திருமந்திரம்.
உலகில் பலவிதமான யோகா நெறிகள் உண்டு. அந்தநெறி இந்த நெறி என்று எண்ணாமல் அட்டங்கம் என்ற வாசி யோக நெறியை கடை பிடியுங்கள். அதில் சமாதி நிலை அடையுங்கள். இதனால் ஞானம் அடையலாம். யாகம் போன்ற தவறான வழியால் இறைவனை அடைய முடியாது.
வாசியோகம் செய்வதால் யோக சித்தி யுடன் காய சித்தி , வேதை சித்தி , ஞான சித்தி கிடைக்கும். வாசி யோகம் செய்யாது பிற சித்தி அடைய முடியாது. . அணைத்து சித்திகளுக்கும் வாசி யோகமே அடிப்படை. இதை திரு வள்ளுவர் பஞ்ச ரத்தினம் ௫௦௦ என்ற நூலில் பாடல் ௩௧௬ இல் சொல்லியுள்ளார்..
அட்டாங்க யோகம் அது பலித்திட அருளும் முக்தி.
தொட்டங்கு நின்று துணைய இயம, நியம , ஆசனம்
பட்டாங்கில் உள்ளபடி பாவிக்கதற்கு
முட்டாகும் முப்பு முடியாது மொழிந்தேன் இது சத்தியம்.
அட்டாங்க யோகம் என்ற வாசி யோகத்தை தக்ஷனா மூர்த்தி சுப்பிரமணியர் , அகத்தியர் , திரு மூலர் , போகர் , ரோமர், காக புசுண்டர், திருவள்ளுவர் மற்றும் சித்தர்கள் சொல்லி உள்ளார்கள். விஷ்ணு புராணத்தில் பராசர முனியும் , யோக சூத்திரத்தில் பதஞ்சலியும் சொல்லி உள்ளார்கள் .
எனவே உறுதியான உடல் பெற , உயர்ந்த அறிவு பெற , நிறைந்த சக்தி பெற , அறவழியில் நிறைந்த பொருள் ஈட்ட , நிறைவான இல்லறம் நடத்த , அமானுஷ்ய சக்தி பெற உள்ளுறை இறைவனை அறிய , காய சித்தி பெற வேதை சித்தி பெற , ஞானம் சித்தி பெற வாசி யோகம் செய்தல் அவசியம் . வாசி யோகத்தின் ஒவ்வொரு அங்கமாக பார்ப்போம். படிப்படியாக வாசி யோகம் செயல்முறை பற்றி பார்போம்....
வாசியோக சந்தேகமும் நிவர்த்தியும்.
***************************************
வாசி யோகத்தில் பிரிவு உண்டா ?
வாசி யோகம் என்பதில் இரண்டு வகை உண்டு . ஒன்று அடிப்படை வாசியோகம் அல்லது வாசியோகம். மற்ற ஒன்று வாசியை வலது இடமாக வாசித்தால் வரும் சிவயோகம். சிலர் இரண்டையும் குழப்பிகொள்கிறார்கள். சிவயோகம் யோகிகளுக்கு மட்டுமே. வாசியோகம் இல்லறதாற்கும் செயல்படும்.
வாசி யோகம் யார் செய்யலாம் ?
வாசி யோகத்தில் பிராணாயாமம் என்பது நான்காம் அங்கம் இதில் வாசி உருவாக்கினால் அது வாசி பிராணாயாமம். இந்த வாசிபிராணாயாமதில் மூலாதாரம் என்ற குதத்திற்கு மேல் இரண்டு விரல் அகலம் உயரே மனதை பதிய வைத்து வாசி யோகம் செய்தால் யாருக்கும் எந்த துன்பமும் வராது எந்தவயதினரும் இதை செய்யலாம் இது மூச்சுக்காற்றை நெறிபடுத்துதல்.
புறப்பட்டு புக்கு திரிகின்ற வாயுவை
நெறிபட உள்லே நின்மலமாக்கில்
உறுப்பு சிவக்கும் உரோமம் கருக்கும்
புறப்பட்டு போகான் புரி சடையோனே
-திருமூலர் திருமந்திரம் பாடல்.
இது அடிப்படை வாசி யோகம் .. அதுவாக கட்டுப்பாடு இல்லாமல் இயங்கும் மூச்சு காற்றை நெறி படுத்தினால் உடல் உறுப்புகள் சிவந்து இளமையுடன் இருக்கும். முடி கருமையாக இருக்கும் . இறைவன் நம்மை விட்டு நீங்கி போகமாட்டன் .. அடிப்படை வாசி யோகத்துடன் மூலிகை கல்பம்கள் உண்ணலாம் .
சிவயோகம் என்பது முப்பு என்னும் சாகா மருந்து உண்டு உயர் நிலை வாசி யோகம் பத்து ஆண்டு செய்வது . இதற்கு குரு உதவியும் பல கட்டுபாடுகளும் உண்டு . . இது மரணத்துக்கு ஒப்பான துயரம் தரும் . முடிவில் அழியா தேகமும் முக்தியும் தரும் . இது யோகிகளுக்கு மட்டுமே . இதில் மூன்று தீட்சை மூன்று ஆண்டு முடித்தால் சித்தர் தகுதி தரும் .. நான் முடித்து உள்ளேன் .. எனக்கு சித்தர்களே குரு
ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் புடிக்கும் கணக்கு அறிவாறில்லை
காற்றை புடிக்கும் கணக்கு அறிவாளற்கு
கூற்றை உதிக்கும் குறி அது வாமே .
-திருமூலர் திருமந்திரம் பாடல்.
மூலதாரத்தில் கால கணக்கோடு வாசியோகம் செய்து
குண்டலினி சக்தியை உருவாக்கி அது சுவதிஷ்டானம் ,மனிபூரகம் , அனாகதம், விசுக்தி ஆக்யா, ஆகிய ஆறு தலங்களில் வாசியோகம் செய்து மேலே ஏறி குண்ட்லியையும் மேலே ஏற்றி பிடரி வழியாக ஒவொரு தளமாக கிழே இறங்கி மூலாதாரம் அடையவேண்டும். அப்பொழுது இரண்டு நாசி துவாரத்தின் வழியாகவும் வாசி யோகம் செய்ய வேண்டும் . . இத்தகைய வாசி யோகம் செய்பவர் யாரும் இல்லை . அப்படி செய்தவர் எமனை எட்டி உதைக்கும் தகுதி படைத்தவர் . இது சித்தர்களும் யோகசித்தி அடைந்தவர் மட்டுமே செய்ய முடியும் . இதை தினமும் நான் செய்கிறேன் .. இது சிவ யோகம் இதை கற்றுக்கொள்ள குரு வேண்டும் . 30 வயதிற்கு மேற்பட்டவர் யாரும் இதை செய்யலாம்.
அடிப்படை வாசி யோகம் செய்ய தீட்சை பெற வேண்டுமா ?
செய்முறை சொல்லி தருவதே தீட்சை. குரு என்பவருக்கு மாணவர் தட்சனை தரவேண்டும் . குரு கற்று கொடுக்க வேண்டும் .. இந்தவகுப்பில் நான் யாருக்கும் குரு இல்லை . வழி காட்டி மாணவர் இயம நியமத்துடன் அன்புடன் இருப்பதே நான் கேட்கும் கட்டணம் . நான் வேறு கட்டணம் கேட்கவில்லை .. நான் சொல்லித்தரும் செய்முறைகளே தீட்சை . விருப்பமுள்ளோர் சாங்கியம் வேண்டும் என்றால் உங்கள் வீட்டில் தீபம் ஏற்றி சித்தர் படம் வைத்து அல்லது சாமிபடம் வைத்து சித்தரிடம் வாசியோகம் கற்றுதர வேண்டி கொண்டு பயிற்சி ஆரம்பியுங்கள். வாசி யோகம் சித்தர் சொத்து .. என்னுடையது இல்லை. சித்தரிடம் வேண்டுங்கள் .
இல்லறத்தில் இருந்து கொண்டு வாசி யோகம் செய்யலாமா?
என்யோகம் நின்யோகம் வசிஷ்டர் யோகம் .
இதனிர்தான் நிக்கோடு விசுவாமித்திரர்
இம்மலையில் வியாசரிஷி சுகரின் யோகம்
இதனிர்தான் காகியரும் கும்பனாதர்
இதனிற் தான் தெட்சனத்தர்ர் யோகமோடு
இல்லறத்தில் இருந்தார்கள் பாகமொடு . .
-காக புசுண்டர் பெரு நூல் காவியம் .பாடல்.
பொருள்-
***********
நான் செய்யும் வாசி யோகமும் நீங்கள் செய்யும் வாசி யோகமும் வஷிஸ்டர் , விசுவாமித்திரர் , வியாச ரிஷி , சுகர் . கக்கியர் . கும்பனாதர் என்ற அகத்தியர் தெற்கு பக்கத்து சித்தர்களும் செய்ததார்கள் இந்த யோகத்தை செய்து கொண்டு இல்லறவாழவிலும் சிறப்பாக வாழ்ந்தார்கள்
“இல்லறத்தில் இருந்தாலும் முக்தி தானே .”
காக புசுண்டர் பெரு நூல் காவியம் பாடல் கூறுகிறது.
வாசி யோகம் செய்ய தியான மண்டபம் , காடு குகை போகவேண்டுமா ?
வேண்டாம் வீடு போதும் . வீட்டிலே கூட்டினுள்ளே முக்தி உண்டு
மெய்யிலே சோதி உண்டு திரிகாலங்கள்
இந்த உடம்புக்குள் ஜோதிஎன்ற இறைவன் உண்டு அவனை வீட்டில் இருந்து உடல் என்னும் கூட்டில் கண்டு முக்தி பெறலாம் .
வாசி யோகம் செய்தால் செல்வம் போய் விடுமா ?
இல்லை அறவழியில் செல்வம் வரும் வறுமை வராது. வந்த செல்வம் போகாது .
வருனையே தாறது யோகம் யோகம்
வாய்த்தாலே போகாது ....
-காகபுசுண்டர் பெருநூல் காவியம் பாடல்.
குரு தீட்சை கொடுத்தால் முக்தியும் சித்தியும் கிடைக்குமா ?
இல்லை நீங்கள் தான் வாசி யோகம் செய்து முக்தி அடையவேண்டும் . சாஸ்திரங்கள் படித்தோ , குரு தீட்சை பெட்றோ. மந்திரங்கள் ஓதியோ முக்தி பெறமுடியாது . வாசி யோகம் செய்ய வேண்டும் ..
ஆகுமோ சாத்திரத்தால், குருவால் ஆகா
ஆச்சரிய மந்திரத்தால் ஜெப்பத்தால் ஆகா
-காக புசுண்டர் பெரு நூல் காவியம் பாடல்.
இருபது வயதிற்கு கீழ் வாசி யோகம் செய்தவர் விரைவில் மரணம் அடைவார ?
இருபது வயதிற்கு கீழ் சிவயோகம் செய்து முக்தி பெற்றவர் விரைவில் பரு உடல் இழப்பார்கள்.
ஐம்பது வயதிற்கு மேல் தான் வாசி யோகம் செய்ய வேண்டுமா .?
கட்டாயம் இல்லை எந்த வயதிலும் அடிப்படை வாசி யோகம் செய்யல்லாம் சிவயோகம் நாற்பது வயதிற்கு மேல் என்பதுக்குள் செய்யலாம் .
உடற்பிணி இருப்பவர் வாசி யோகம் செய்யலாமா ?
முடிந்த வரை செய்யலாம் . முடியாவிட்டால் செய்யவேண்டாம் .
வாசியோகம் செய்ய பத்தியம் உண்டா ?
இல்லை சரிவிகித உணவு எதுவும் சாப்பிடலாம் .. சிலருக்கு சர்க்கரை . உப்பு சத்து இருந்தால் அதற்கான பத்தியம் காத்தல் நன்று . நாளடைவில் நோய் கட்டுப்படும்.
பத்தியமே இல்லையட முப்பதின்
மேல் பாரினிலே யாருக்கும் . .
-காக புசுண்டர் பெருநூல் காவியம் பாடல்.
வாசியோகம் ஆரம்பிக்கும் முன் சில தயாரிப்புகள் வேண்டும் . அதற்கு வாசி யுடன் தொடர்புடைய காரணி்களை பார்போம்.
பாரப்பா சென்னியின் நீர் காலனகும்
பார்த்து அறுத்தார் சென்னியின் நீர் பித்தம் தானே
வீரப்ப வளநீரே இடுப்பில் வாதம்
மெய்யதனில் நெஞ்சுதொண்டை விழாவின் பக்கம்
துரப்ப மூலதண்டு நாக்கு மட்டும்
சொல்மொழியும் சேத்துமன் தான் சமனை நின்றால்
காரப்ப நாசிவழி பிராணண் பாரு
கால வாசி நேர்ணடக்க நாக்கு மூக்கே
-காக புசுண்டர் பெரு நூல் காவியம் பாடல்.
பெரும் சித்தி கெடுத்துவிடும் மலமும் பூச்சி. பாடல் ௮௫௩ 853
நோய் கோழை உடற்கு எமன் தானே. பாடல் ௮௪௫ 845.
மனம் மாண்டால் பொருள் உனதோ உடல்தான் மாலும் பாடல் ௮௫௨ 852
தந்தையென்ன இவவுடற்கு மனது தானே பாடல் ௮௪௫ 845
இந்த உடலை அழிப்பவை சென்னியில் இருக்கும் பித்தநீர்.
இடுப்பில் இருக்கும் வாத நீர் . நாக்கு தொண்டை முதுகு தண்டு பேச்சை குலரவைக்கும் சிலேத்துமம் . இம்மூன்றும் சமமாய் இருந்தால் உடல் அழியாது அதற்கு உயிர் சக்தி பெறவேண்டும் . அதற்க்கு வாசி யோகம் செய் .
> வாசி யோகம் சித்தி அடைவதை தடுக்கும் மலத்தில் உள்ள பூச்சி . எனவே அதை போக்க குடலை சுத்தி செய்யவேண்டும் . இதற்கு கடுக்காய் கற்பம் உண்ணவேண்டும் .. இதற்கு தனி பதிவு செய்வேன் .
கோழை உடலின் சளிப்படலம்மாக உடல் முழுவதும் இருக்கும் அதை போக்குவது கடினம் . இதற்கு சித்தர்கள் வழழை வாங்கல் என்ற ஒரு முறை சொல்லியுள்ளர்கள் . இதற்கு கரிசாலை , கத்தாழை கடுக்காய் கற்பம் பயன்படும் இதையும் தனி பதிவு செய்வேன் .
கோழையும் மலமும் கற்பத்தால் சுத்தி செய்யமுடியும் .
வாசியை தொடர் புடைய முக்கிய காரணி மனம். மனதை பற்றி அகத்தியர் சொன்னது .
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே (அகத்தியர்
சில மூட குருக்கள் இப்பாடலை காட்டி வாசியோகமும் மந்திரங்களும் செய்யவேண்டாம் மனம் செம்மையானால் போதும் என்பார்கள் . இப்பாடலில் உள்ள மறைப்பை அறியார்கள் . . மனம் செம்மை ஆவது எப்படி என்றல் தியானம் செய்யுங்கள் என்பார்கள் . மனம் செம்மையானால் தான் தியானம் கைகூடும் . ஆக மனமும் செம்மை ஆகாது தியானமும் கைகூடாது . இவர்கள் குழப்பவாதிகள்
சித்தர்கள் இந்த மறைப்பை வேறு இடத்தில் விடு விக்கிரார்கள் ..
“சுழிமுனை திறந்தால் மனம் சுழியில்
அகப்பட்ட துரும்பு போல் ஒடுங்கும் “
சுழிமுனை திறக்க வாசி யோகம் செய்ய வேண்டும் . அப்பொழுதுதான் மனம் செம்மை படும் . வாசி யோகம் செய்து மனதை செம்மை படுத்திய யோகியின் மூச்சு வாசியாக மாறிவிடும் எனவே அவர் வாசி யோகம் செய்யவேண்டாம் . அவர் சொல்லும் சொற்களே மந்திரம் எனவே அவர் மந்திரங்கள் சொல்லவேண்டாம் .
எனவே வாசி யோகமும் மனமும் நெருங்கிய தொடர்பு உடையவை . ஆனால் மனதை நெறி படுத்தினால்தான் வாசி யோகமே செய்ய முடியும் .வாசியோகம் செய்தால் தான் சுழிமுனை திறந்து மனம் ஒடுங்கி செம்மை ஆகும் .. யோகம் சித்தி ஆகும் . யோகம் சித்தி ஆனால் ஞானம் சித்தி ஆகும். இதுவே முக்தி. மனதை நெறிபடுத்தல் எல்லாவற்றிற்கும் அடிப்படை..
மனதை நெறிப்படுத்த சித்தர்கள் ஹட யோகிகள் செய்முறை வகுத்தனர்.
ஹட யோகிகள் த்ராடக என்ற செய்முறை (தீட்சை) கடை பிடித்தனர்.
சித்தர்கள் சூரிய யோகம் சந்திர யோகம் அல்லது சூரிய சந்திர யோகம் என்ற செய்முறை வகுத்தனர் .
இவற்றை ஸ்ரின்கேறி ஜகத் குரு அபிநவ வித்யாதீர்த்த மகா ஸ்வாமிகள் செய்தார் . விவேகாநந்தர் செய்தார் . இதன் அடிபபடையில் கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் தியான மண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது .
இதன் தத்துவத்தை பார்ப்போம் . . மனம் என்பது கண்டு , கேட்டு ., உண்டு , உயிர்த்த புலன் களின் தொகுப்பு . மனதை குவிய செய்ய இந்த ஐந்து புலன்களையும் குவியசெய்தால் மனம் குவியும் . மனம் நெறிப்படும். இதற்கான தொழில் நுட்பமே த்ரடகவும் , சூரிய சந்திர யோகமும்
நான் சில ஆண்டுகள் இந்த இரண்டு பயிற்சிகள் செய்து வெற்றிகண்டேன் இந்தவெற்றியால் என்னுடைய ஆவியை நான் காண முடிந்தது .
ஆரம்ப செய்முறை பயிற்சிகளை சொல்கிறேன்.
த்ராடக-
*********
ஒரு சுவற்றில் உள்ள சுவாமிபடத்தில் சுவாமியின் கண்களை மட்டும் இமை கொட்டாமல் பாருங்கள் . சிறிது நேரத்தில் கண்ணீர் வடியும் . அதன் பின் பழக பழக கண்ணீர் வரத்து நின்றுவேடும் .. சிறிது சிறிதாக நேரத்தை கூட்டுங்கள் . . இரவில் சிறு பலப்லோ வோல்டேஜ எரியவைத்து அதை இமை கொட்டாமல் பார்த்து பழகுங்கள். இதனால் மனம் குவியும் . விவேகானந்தர் தியான கூடத்தில் ஒரு இருட்டு அறையில் ஓம் என்ற குழல் விளக்கு எரியும் . அதை பார்த்து தியானம் செய்வார்கள் . . கண்கள் சோர்வு அடையாமல் சிறிது சிறிதாக நேரத்தை கூட்டி செய்யுங்கள் .
சூரிய யோகம் .
****************
ஏதுமென்ற பங்குனி சித்திரை இரண்டில்
இதமாக உதயத்தில் ரவியை பாரு
தேருமடா கண் கூசிடாது இளமை வெயில்
தீர்க்கமாய் பிங்கலையில் கண் மூடிப்பரு .
. நூறு மடங்காய் அருணன் காந்தி வீசும்
நுனியான சுழி முனையில் உற்று பாரு
பேருபெருன்ச் சுளினைஎலே கண் கெடாது .
பேராக இன்னமொரு சேதி கேளு
-அகத்தியர் பூஜா விதி பாடல்.
பொருள்-
**********
பங்குனி சித்திரை மதத்தில் சூரியன் உதயமாகும் போது சூரியனை பாருங்கள் . கன்னியா குமரியில் சூரிய உதயம் பார்ப்பது போல் . கண் கெடாது பின்பு கண்ணை மூடி மோதிர விரலால் இடது நாசியை அடைத்து வளது நாசியில் சுவாசியுங்கள் . அன்நாக்கிற்கு மேல் மனதை நிறுத்தி பாருங்கள் . உள்ளுக்குள் ஒளி தெரியும் ..
தயவு செய்து இதை உடனே செய்ய தீர்கள் த்ரடக செய்து சித்தி ஆனா பின்பு சூரியனை நேரில் பாருங்கள் யோகதொடக்கம் .
ஆரம்பத்தில் குளித்து மேல் ஆடை இல்லாமல் சூரியன் முன்பு நில்லுங்கள் . ஓம் ந மா சி வ யா என்று 108 முறை சொல்லுங்கள் . . அல்லது உங்கள் விருப்ப ஜெபம் , மந்திரம் சொல்லுங்கள் சுமார் 7 முதல் 10 நிமிடம் செய்தால் போதும் .
இந்த யோகம் சக்தி வாய்ந்தது . ஸ்ரீ ராமர் சூரிய யோகம் செய்து அதித்ய ஹிருதயம் என்ற மந்திரம் ஜெபித்து ராவணனை வென்றார் . சூரிய ஒளி தரும் வைடாமின் டி உணவில் இருந்து கல்சியத்தை பிரித்து உடலின் செல்களுக்கு கொடுக்கும் . கல்சியம் உடலை இளமையாக வைத்திருக்கும் . சூரிய நாடியில் உயிர் சக்தி முழுமையாக பிரபஞ்சத்தில் இருந்து கிடைக்கும் ..
பின்பு வீட்டிற்குள் வந்து ஒரு கோரை பாய் அல்லது பருத்தி துணிமேல் சம்மணம் இட்டு நிமிர்ந்துஉட்காருங்கள். உங்கள்ளல் எவ்வளவு மூச்சை இரண்டு நாசியிலும் இளுக்க முடியும்மா அவ்வளவு இழுங்கள் . எவ்வளவு நேரம் நிறுத்த முடியுமோ நிறுத்துங்கள் . பின்பு வெளிவிடுங்கள் இப்படி 7 முறை செய்யுங்கள் .. இப்படி 10 நாட்கள் செய்யுங்கள் .

Comments
Post a Comment